Loading...
 

வெளி கிளப்பை இணைத்தல்

 

Agora Speakers International கொண்டிருக்கும் முக்கிய கொள்கைகளுடன் பொருந்தக்கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனம், சமூக சேவை அல்லது ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் கிளப்பை நீங்கள் ஏற்கனவே நடத்தி வந்தால், Agora சமூகத்தில் சேருவதன் மூலம் கிடைக்கும் கூடுதல் பலன்களை உங்கள் உறுப்பினர்களுக்கு நீங்கள் எளிதாக கூறிடலாம்.

இணைப்பதன் மூலம் கிடைக்கும் பலன்கள்

Agora உடன் இணைப்பதன் மூலம், உங்கள் உறுப்பினர்களுக்கு Agora உடைய முழு உறுப்பினர் உரிமையையும், உலகளவில் இருக்கும் Agora சமூகத்திற்கான அணுகலையும் வழங்குகிறீர்கள் - இதில் கல்வி ரீதியான மெட்டீரியல்கள், சர்வதேச போட்டிகள், எங்களது ஆன்லைன் தளம், தகவல் தொடர்பு மற்றும் மேலாண்மை கருவிகள், நெட்வொர்க்கிங் மற்றும் வழிகாட்டும் வாய்ப்புகள் போன்ற அனைத்தும் அடங்கும். உலகெங்கிலும் உள்ள ஏதேனும் Agora கிளப்பில் நடக்கும் சந்திப்புகள், Agora நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் அவர்களால் பங்கேற்க முடியும்.

  • உங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம், சமூக சேவை அல்லது ஏற்கனவே செயல்பட்டு வரும் கிளப் வழக்கமாக சந்திக்குமானால், இந்த சந்திப்புகளில் சிலவற்றை Agora ஸ்டைல் சந்திப்பாக மாற்றுவது எளிதான வழியாக இருக்கும். உதாரணமாக, உங்கள் கிளப் வாரந்தோறும் சந்தித்தால், ஒவ்வொரு மாதமும் ஒரு சந்திப்பை "Agora சந்திப்பு" ஆக நடத்த நீங்கள் முடிவு செய்யலாம். ஒரு வகையில், இது "ஒரு கிளப்பிற்குள் இன்னொரு கிளப்" இருப்பதைப் போன்றது.
  • மற்றொரு வழி என்னவென்றால் உங்கள் கிளப்பில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை "Agora சந்திப்பு விரிவாக்கம்" மூலம் விரிவு படுத்தலாம். உதாரணமாக, நிதி திரட்டுவதற்காக நீங்கள் வழக்கமாக சந்திப்பீர்களேயானால், அந்தச் செயல்பாடு நிறைவடைந்ததும், நீங்கள் Agora சந்திப்பை நடத்தலாம்.

இணைவதானது பகிரங்கமாக நடைபெறும் - Agora Speakers International மற்றும் உங்கள் அமைப்பு இரண்டும் தரநிலை வாய்ந்த ஃபார்மேட்டை பயன்படுத்தி கூட்டாக சேர்ந்து இணையும் செய்தியை வெளியிடும்.

தேவையான விஷயங்கள்

சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், உங்கள் செயல்பாடுகளில் Agora பகுதியானது முழு பொது Agora கிளப்பாக செயல்பட வேண்டும். இதன் பொருள்:

  • இது கிளப்புகளுக்கான Agora வழிகாட்டுதல்கள் அனைத்துக்கும் இணங்க வேண்டும், இதில் இணக்கமான பெயர், கிளப் எண் மற்றும் தேர்வு செய்யப்பட்ட கிளப் அதிகாரிகளின் தொகுப்பு ஆகியவை அடங்கும்.
  • உறுப்பினர்கள் ஆன்லைன் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். CSV பட்டியலிலிருந்து உங்கள் உறுப்பினர்களை நாங்கள் மொத்தமாக தரவிறக்குமதி செய்யலாம் அல்லது அவர்கள் கைமுறையாக பதிவு செய்யலாம்.
  • அனைத்து கிளப் விரிவாக்கங்களும் எங்கள் தளத்தில் ஹோஸ்ட் செய்யப்பட்ட Agora கிளப்புகளாக பட்டியலிடப்படும். உங்கள் நிறுவனம் பற்றி குட்டி சுயவிவரத்தை நீங்கள் வழங்கலாம், அது கிளப் விளக்கத்தில் சேர்க்கப்படும். இருப்பினும், Agora மாதிரியுடன் ஒத்துப்போகும் சந்திப்பு அட்டவணைகள் மட்டுமே விளம்பரப்படுத்தப்படும்.
  • அனைத்து Agora-வகை சந்திப்புகளும் திறந்தநிலையில் பொது கிளப்புகளாக செயல்பட வேண்டும்: அவர்கள் விருந்தினர்கள், பிற Agora உறுப்பினர்கள் மற்றும் பதிவு செய்துக்கொள்ள விரும்பும் புதிய சாத்தியமான உறுப்பினர்களையும் ஏற்க வேண்டும்.
  • புதிய உறுப்பினர்கள் Agora-வகை சந்திப்புகளுக்கு மட்டுமே பதிவுபெற முடியும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், Agora-வகை அமர்வுகளுக்கு வருவதற்கு வேறு எந்த நிறுவனத்திலும் உறுப்பினர் உரிமை பெறவேண்டிய தேவை இருக்கக்கூடாது (நிச்சயமாக, Agora-வகை சந்திப்புகளில், கிளப்புகள் மற்ற பகுதியையும் விளம்பரப்படுத்தலாம் மற்றும் ஊக்குவிக்கலாம்).
  • Agora பகுதியில் பங்கேற்பதற்கு முக்கிய நிறுவனத்தில் வேறு எந்த நடவடிக்கைகளும் தேவையில்லை.
  • உங்கள் செயல்பாடுகளில் அகோரா பகுதியில் மட்டும் சேர விரும்பும் நபர்கள் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

 


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:00:53 CET by agora.